தைப்பூசம் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்!

தைப்பூசம் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்!

தைப்பூசம் விரதம் மகிமை!

தைப்பூசம் விரதம் இருப்பது மிகவும் எளிமையானதாகும். இதனை செய்து வர தீராத பிரச்சனைகளை கந்தன் தீர்த்து தீர்த்து வைப்பார். சகல சௌபாக்யமும், செல்வ வளத்தையும் கொடுப்பார். தைப்பூசம் அன்று காவடி எடுத்தால் நன்மைகள் ஏராளம்.

பல வித காவடிகளும் அதன் பலன்களும்!

காவடிகளில் பல வித காவடிகள் இருக்கின்றது. சிலர் தங்கள் சக்திக்கேற்ப காவடி எடுப்பதும் உண்டு. கந்தன் எப்பொழுதும் எதையும் எதிர்பாராதவர். காவடி எடுக்க இயலாவிட்டாலும் தைப்பூசம் நன்னாளில் மனதார வணங்கினால் போதும்.

பால் காவடி

தைப்பூசம் நன்னாளில் பால் காவடி எடுத்து அதனை முருகனுக்கு அபிஷேகத்திற்கு கொடுத்தால் செல்வம் நிலைக்கும். ஒரு சிலர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் சேர்க்க இயலாமல் இருக்கும். இவர்கள் எந்திரம், மந்திரம் என்று தேடி கொண்டு இருக்காமல் இறைவனை வணங்கினாலே போதுமானது.

சந்தன காவடி:

சந்தன காவடி எடுப்பதால் தீராத சண்டை, சச்சரவு என்று இருப்பவர்களின் வீட்டில் ஒரு முடிவு பிறக்கும்.

மயில் காவடி:

மயில் காவடி எடுத்தால் சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

பன்னீர் காவடி

பன்னீர் காவடி எடுத்தால் கடன் பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.

சர்ப்பக் காவடி

சர்ப்ப காவடி என்பது சர்ப்ப வடிவில் அதாவது நாகம் வடிவில் செய்து, அதில் சில அபிஷேகப் பொருட்கள் வைத்து காவடி எடுப்பார்கள். இந்த சர்ப்ப உருவத்தை கோவிலுக்கு கொடுத்து, அதில் இருக்கும் அபிஷேகப் பொருட்களை திருமுழுக்குக்காட்டுவது தான் சர்ப்ப காவடி. இதனை செய்தால் தீராத நோய்களில் இருந்து விடுபடலாம். கிரக தோஷம், சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் இதனை தைப்பூசம் நன்னாளில் செய்து வர நிவர்த்தி பெறலாம்.

தை பூசம் விரதம் எவ்வாறு இருப்பது?

தைப்பூசம் தினத்தன்று அதிகாலையில் நீராடி, திருநீறு பூசி, முருகன் பெயரை உச்சரித்து மனதார வணங்க வேண்டும். கந்தனை நினைத்து,  கந்தனின் நாமத்தை உச்சரித்து, பாடல்கள் பாடி பலன் பெறலாம்.

பால், பழங்களை உண்ணலாம். தயிர், மோர் போன்றவற்றை தவிர்த்து விடலாம். கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் படிக்கலாம். அதனை படிக்க இயலாதவர்கள் வீட்டில் ஒலிக்க விடலாம். வழக்கம் போல் அனைத்து வேலைகளும் செய்யலாம். மாலை நேரத்தில் நீராடி, அருகில் இருக்கும் முருகன் கோவில்களுக்கு சென்று தங்கள் விரதத்தை முடித்து கொள்ளலாம். முருகன் அல்லது சிவன் கோவில்களுக்கு  சென்று தியானம், வழிபாடு செய்யலாம். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இறைவனை வணங்கி தங்கள் விரதத்தை முடித்து கொள்ளலாம்.

தைப்பூசம் முருகனுக்கு விசேஷமான நாளாக கருதப்படுகிறது. அன்று முருகனை நினைத்து மனதார வணங்கினால் நிம்மதியான வாழ்க்கை பெறலாம். உடலில் இருக்கும் கோளாறுகள், கடன் தொல்லை, தேவையில்லாத சிந்தனை, மனக்குழப்பம் அகலும்.

Share this story