பங்குனி உத்திரம் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

பங்குனி உத்திரம் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

வளமான வாழ்க்கைக்கு பங்குனி உத்திரம் விரதம்!

மாதந்தோறும் வரும் உத்திரம் நட்சத்திரம் நாட்களை விட, பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நாள் விசேஷமாக கொண்டாடுகின்றார்கள்.

பங்குனி உத்திரம் விரதம்:

திருமண தடை இருப்பவர்கள் இந்த பங்குனி உத்திரம் நட்சத்திரம் அன்று இறைவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் விரைவில் நல்ல வரன் அமையும். இந்த பங்குனி உத்திரம் விரதத்தை இருபாலரும் கடைபிடிக்கலாம். இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமணம் விரதம் என்றும் அழைப்பார்கள். திருமணம் ஆகியும் பல வித தடைகள், சோதனைகள், வாழ்க்கை துணையின் உடல் நலனில் பாதிப்பு என பல வித பிரச்சனைகளை சந்திக்கின்ற இருபாலரும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.

அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜை அறையில் விளக்கு ஏற்றி, முருகன் துதி பாடல்களை படிக்கலாம். அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று விரதத்தை தொடங்கலாம். மாலையில் கோவிலுக்கு சென்று அந்த விரதத்தை முடித்துக் கொள்ளலாம். முழு நேரம் விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம்  எடுத்துக் கொள்ளலாம். பங்குனி உத்திரம் திருநாளில் தெய்வ தம்பதிகளை தொழுது வளமான வாழ்க்கை பெறலாம். தொடர்ந்து நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு பங்குனி விரதம் இருப்பவர்களுக்கு பிறவி பிணி நீங்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழக்கையில் உள்ள பல வித இன்னல்களை அகற்ற பங்குனி உத்திரம் அன்று முடிந்த அளவிற்கு தானம் செய்யுங்கள். கோயில்களில் தான் தானம் செய்ய வேண்டும் என்பது அல்ல, அருகில் இருக்கும் தெருவில் வசிக்கும் ஏழை எளியோருக்கு உணவு வாங்கி தரலாம். தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர்  கொடுத்து வரலாம். முருகனுக்கு உகந்த இந்த பங்குனி நட்சத்திரம் அன்று ஒரு தம்பதியருக்கு உணவு அளித்து, உடுத்தி கொள்ள புடவை, வேட்டி எடுத்து கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் முருகன் உங்களுக்கு அருள் புரிவார்.

Share this story