இராகு மற்றும் கேதுவின் பரிகார ஸ்தலங்கள் பற்றி தெரியுமா?

இராகு மற்றும் கேதுவின் பரிகார ஸ்தலங்கள் பற்றி தெரியுமா?

ராகு மற்றும் கேதுவின் அருளைப் பெற பச்சை கற்பூரம் கலந்த பன்னீரால் அபிஷேகம் செய்யலாம். காளஹஸ்தியில் காளஹஸ்தீஸ்வரருக்கு பச்சைக் கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம்தான் செய்வார்கள். ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட பெருமாளை வணங்குவதன் மூலமும் ராகு, கேதுவின் அருளைப் பெறலாம்.

  • சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட ஸ்ரீஅனந்தீஸ்வரரை ராகு-கேது பெயர்ச்சியின்போது வழிபடலாம்.
  • பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி சந்நிதி உண்டு. இங்கு வழிபடலாம்.
  • திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அபிஷேகம் செய்யலாம்.
  • சீர்காழியில் சிரபுரம் பகுதியிலுள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது ஸ்தலம் ஆகும்.
  • தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்- திருச்செந்தூர் பாதையில் உள்ள தொலைவில்லிமங்கலம் சென்று வணங்கலாம்.
  • ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா காஞ்சிக்கோவில் (வழி) தண்ணீர்பந்தல் பாளையம் போஸ்ட், தங்கமேடு தம்பிக்கலை ஐயன் சுவாமி திருக்கோவில் ராகு- கேதுவுக்குரிய பரிகார தலம் ஆகும்.
  • திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், ராதாபுரம் அருகில் உள்ள விஜயாபதி- விசுவாமித்திரர் தவம் இருந்த பூமி தில்லைக்காளியும் உண்டு.

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம் ஆகும். அதனால் இங்கு சென்றால் இராகு கேதுவின் முழு அருளை பெற முடியும்.

Share this story