டேஸ்ட்டியான தர்பூசணி அல்வா!!
Jul 20, 2020, 14:45 IST

நாம் வீட்டில் பொதுவாக கேரட் மற்றும் பீட்ரூட் அல்வாக்களையே செய்து சாப்பிட்டு உள்ளோம். அந்தவகையில் நாம் இன்று வித்தியாசமாக தர்பூசணியில் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தர்பூசணி பழம் - 1
வெல்லம் – 1/2 கிலோ
தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்
நெய் - 50 கிராம்,
முந்திரி - 5
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
செய்முறை:
1. தர்பூசணியில் சதைப் பகுதியை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
2. வெல்லத்தை தண்ணீர் இட்டு வாணலியில் ஊற்றி, பாகு காய்சச்சிக் கொள்ளவும்.
3. அடுத்து தர்பூசணி கூழ், தேங்காய்ப்பால், நெய் சேர்த்து வேகவிடவும்.
4. அடுத்து அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், முந்திரிபருப்பு சேர்த்து இறக்கவும்.
5. நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிட்டு, துண்டுகளாக வெட்டினால்
தர்பூசணி அல்வா ரெடி.