Tamil Wealth

சமையல் கற்றுக்கொள்ள போறிங்களா? உங்களுக்கு தேவையான டிப்ஸ் !

சமையல் கற்றுக்கொள்ள போறிங்களா? உங்களுக்கு தேவையான டிப்ஸ் !

நீங்கள் சமைக்க ஆரம்பிக்கும் பொழுது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டும். காயங்கள் விரைவில் ஏற்படும் அபாயம் உள்ளது. புதிதாக சமைக்கும் பொழுது எப்படியும் கைகளில் காயங்கள் ஏற்படும்.

காய்கறி நறுக்குதல் :

காய்கறிகளை நறுக்க பயன்படும் கத்தியை கையாளும் பொழுது மிகவும் கவனம் தேவை. இதுவரை காய்கறி நறுக்கியதில்லை என்றால் திடீர் என்று நறுக்கும் பொழுது கைகளில் காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் மிகுந்த கவனத்துடன் நறுக்க வேண்டும், கவனத்தை காய்கறி நறுக்குவதில் செலுத்த வேண்டும். வீட்டில் இருப்பவர்களின் அறிவுரைகளை நன்கு கேட்டு கொண்டு ஆரம்பியுங்கள்.

எளிய முறை :

குழந்தைகளுக்கு சமையல் சொல்லி கொடுக்கும் பொழுது, முதலில் ஆரம்பிக்க வேண்டியது நெருப்பில்லாமல் சமைக்க கற்று கொடுப்பதே சிறந்தது, படி படியாக சொல்லி கொடுப்பதே நல்லது, இல்லையென்றால் கைகளில் காயங்கள் ஏற்படும்.

தீ காயம் :

சமைக்கும் பொழுது எப்பொலுதும் கைகளில் பாதுகாப்பு உறை அணிந்து கொள்ள வேண்டும். இது புதிதாக சமையல் செய்பவர்களுக்கும் பயன் உள்ளதாக கருத படுகிறது. சமையல் செய்யும் பொழுது அடுப்பிற்கு அருகில் காகிதம், எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் எதனையும் வைக்க கூடாது, எரிவாயு குழாய்களை சரியாக மூட வேண்டும் மற்றும் அணைக்க வேண்டும்.

சமைக்கும் பொழுது தீயினை மிதமாக வைத்து கொள்ள வேண்டும், அதிகமாக வைப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். தினமும் சமையல் செய்பவர்களுக்கு சில நேரங்களில் காயங்கள் ஏற்படும், முதல் முதலாக சமைப்பவர்கள் கவனம் மிக முக்கியம். முக்கியமாக எரிவாயு பயன்படுத்துவதில் தான் மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டும்.

மின்சாரத்தின் மூலம் உபயோகிக்கும் சாதனங்களும் பயன்படுத்தும் பொழுது மிக கவனம் தேவை. இதனை சரியாக கவனிக்கவில்லை என்றால் வீடே தீ பிடித்து விடும் அபாயம் ஏற்படும்.

சூடான பாத்திரம் :

சமையலில் செய்யும் கோளாறே சூடான பாத்திரத்தை கைகள் கொண்டு தூக்குவதே. மெய் மறந்த நிலையில் பாத்திரத்தை தூக்கும் பொழுது கைகளில் காயம் ஏற்பட்டு, சமையலும் வீணாக்கப்படும்.

Share this story