வாழைக்காய் புட்டு செய்வது எப்படி?

வாழைக்காயில் நாம் இன்று வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிப்பியான வாழைக்காய் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருடகள் :
வாழைக்காய் - 3
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 1/4 கப்
இஞ்சி - 1 துண்டு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு- சிறிதளவு,
உளுந்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வாழைக்காயை வெட்டி தண்ணீர் ஊற்றி வேகவைத்து, எடுத்து தோல் நீக்கி பிசையவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுது சேர்த்து தாளிக்கவும்.
4. வெங்காயம், மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து வாழைக்காய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து இறக்கினால் வாழைக்காய் புட்டு ரெடி.