Tamil Wealth

சுவையான வரகு அரிசி பிரியாணி!!

சுவையான வரகு அரிசி பிரியாணி!!

வரகு அரிசியானது மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற அனைத்தையும் அதிக அளவில் கொண்டுள்ளது, இந்த வரகு அரிசியில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • வரகு அரிசி - 4 டம்ளர்
  • பட்டை - 2
  • கிராம்பு - 3
  • ஏலக்காய் - 2
  • நெய் -150 கிராம்
  • மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் -அரை ஸ்பூன்
  • பச்சைப்பட்டாணி - 100 கிராம்
  • வெங்காயம் - 3
  • தக்காளி - 3
  • புதினாதேவையான அளவு
  • மல்லித்தழை - தேவையான அளவு
  • கேரட் - 2
  • பீன்ஸ் - 100 கிராம்
  • உருளைக்கிழங்கு - 2
  • தயிர் – 1 கப்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு

செய்முறை:

  • 1. முதலில் வரகு அரிசியை வறுத்துக் கொள்ளவும்.
  • 2. அடுத்து நெய்யை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
  • 3. அடுத்து வெங்காயம், தக்காளி, இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • 4. அடுத்து, தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, தயிர், புதினா, கொத்தமல்லித் தழை, காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
  • 5. அடுத்து தண்ணீர் வரகு அரிசி சேர்த்து கிளறி விசில் போட்டு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
  • 6. அடுத்து வேகவிட்டு இறக்கி நெய் சேர்த்துக் கிளறினால் வரகு அரிசி பிரியாணி ரெடி.

Share this story