வீட்டில் இருட்டுக்கடை அல்வா செய்வது எப்படி?

நாம் இதுவரை கேரட், பீட்ரூட் போன்றவற்றில் அல்வாக்களை செய்து சாப்பிட்டு இருப்போம், அந்தவகையில் தற்போது இருட்டுக்கடை அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கோதுமை - ஒரு கப்,
சர்க்கரை – 2 1/2 கப்,
நெய் – 1/2 கப்,
எண்ணெய் – 1/4 கப்,
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
கேசரி பவுடர் - 2 சிட்டிகை,
முந்திரி- தேவையான அளவு,
பாதாம் - தேவையான அளவு,
செய்முறை:
1. கோதுமையைக் முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து, மறுநாள் வடிகட்டி, கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.
2. அடுத்து இதில் இருந்து பால் எடுக்கவும்.
3. அடுத்து முந்திரி, பாதாம் போன்றவற்றினை நெய்யில் வறுத்தெடுக்கவும்.
4. சர்க்கரை, கோதுமைப்பால் கலந்து கிளறவும்.
5. இது கெட்டியாகும்போது எண்ணெய் - நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.
6. அல்வா ஒட்டாமல் வரும்போது, சிறிதளவு தண்ணீரில் கரைத்த கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.
7. அடுத்து முந்திரி, பாதாம், சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான இருட்டுக்கடை அல்வா ரெடி.