சுவையான தயிர் வடை ரெசிப்பி!!

இன்று நாம் வீட்டிலேயே தயிர் வடை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
உளுந்து - 1 கப்
உப்பு - தேவைக்கு
பெருங்காயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்
வறுத்த சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை- 1 கப்
எண்ணெய் - தேவைக்கு
தயிர் - 400 கிராம்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி சட்னி - 1டேபிள் ஸ்பூன்
செய்முறை:
1. உளுந்தம் பருப்பை உளுந்த வடைக்கு அரைக்கு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
2. உளுந்து மாவுடன் உப்பு, பெருங்காயம் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
3. அடுத்து வறுத்த சீரகத்தை நசுக்கி மாவில் கலந்து கொள்ளவும்.
4. கொத்தமல்லி இலைகளை தூவி, மாவினை வடை மாதிரி தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
5. வடையில் தண்ணீர் ஊற்றி மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்.
6. மற்றொரு பாத்திரத்தில் தயிரில் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
7. வடையில் தண்ணீரை பிழிந்து அதன்மீது இனிப்பு தயிரை ஊற்றவும்.
8. மேலும் அதனுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லி சட்னி சேர்க்கவும்.
9. கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரித்தால் தயிர் வடை ரெடி.