Tamil Wealth

டேஸ்ட்டியான சுசிய உருண்டை செய்யலாம் வாங்க!!
 

டேஸ்ட்டியான சுசிய உருண்டை செய்யலாம் வாங்க!!

இனிப்பு வகைகளில் நாம் இப்போது ரொம்பவும் சுவையான சுசிய உருண்டை  செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை
கடலைப்பருப்பு – 150 கிராம்
வெல்லம் – 100 கிராம்
நெய்- 1 ஸ்பூன்
தேங்காய் – 150 கிராம்
சுக்குத் தூள் - 1/2 ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் -1 /2 ஸ்பூன்
மைதா மாவு – 50 கிராம்

செய்முறை:
 
1.    கடலைப் பருப்பை 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அந்தப் பருப்பை குக்கரில் தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ளவும். 
3.    வாணலியில் நெய் விட்டு தேங்காய்த் துருவலைக் கொட்டி கொள்ளவும். 
4.    அடுத்து வெல்லத்தை பொடித்து  தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
5.    அடுத்து கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லப்பாகு, சுக்குத் தூள், ஏலக்காய் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். 
6.    அடுத்து உருண்டைகளாகப் போல் கைகளில் தட்டி மைதா மாவுக் கலவையில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் சுசிய உருண்டை ரெடி.
 

Share this story