Tamil Wealth

டேஸ்ட்டியான பாறை மீன் குழம்பு!!

டேஸ்ட்டியான பாறை மீன் குழம்பு!!

மீன் வகைகளில் பாறை மீன் குழம்பு ரொம்பவும் சுவையாக இருக்கும், அதனை எவ்வாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம். நிச்சயம் இதனை செய்து கொடுத்தால், வீட்டில் உள்ள அனைவரையும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

பாறை மீன்1/2 கிலோ

துருவிய தேங்காய்அரை  கப்
மஞ்சள்தூள் - 1டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு
தக்காளி - 1
புளி தண்ணீர்1/2 கப்
பூண்டு - 10 பல்
உப்பு- தேவையான அளவு,

நல்லெண்ணெய் - தேவையான அளவு



செய்முறை

1. மீனுடன் புளித்தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஊறவிடவும்.

2. தேங்காய், மிளகு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், மல்லித்தூள், மிளகாய் தூள், பூண்டு, சின்னவெங்காயம், மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

3. அடுத்து புளித்தண்ணீர் சேர்த்து வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை நறுக்கி அதனையும் சேர்க்கவும்.

4. இறுதியாக நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.

5. சுவையான பாறை மீன் குழம்பு ரெடி.

Share this story