Tamil Wealth

டேஸ்ட்டியான ஹனி சிக்கன் செய்வது எப்படி?

டேஸ்ட்டியான ஹனி சிக்கன் செய்வது எப்படி?

சிக்கனில் இப்போது நாம் மிகவும் வித்தியாசமான ஒரு ரெசிப்பியைத் தான் பார்க்கப் போகிறோம். பலரும் இந்த ரெசிப்பி குறித்து கேட்டிருக்கக்கூடவும் வாய்ப்பில்லை. அப்படி என்ன என்று கேட்கிறீர்களா? அது டேஸ்ட்டியான ஹனி சிக்கன். இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

சிக்கன் - 1/2 கிலோ 

சோள மாவு - 1/2 கப்

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

தேன் - 5 ஸ்பூன்

மிளகுத் தூள் - 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்

பார்பிக்யூ சாஸ் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

வெள்ளை எள் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1. வெள்ளை எள்ளை கடாயில் போட்டு வறுக்கவும்.

2. சிக்கனுடன் அரைத்த இஞ்சி பூண்டு, உப்பு சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

3. அடுத்து வேறொரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்கவும் இதனுடன் ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்.

4. எண்ணெயை ஊற்றி சிக்கனை பொரித்து எடுக்கவும்.

5. அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய், பார்பிக்யூ சாஸ் மற்றும் தேனை ஊற்றி நன்கு கலக்கவும்.

6. பொரித்த சிக்கனை இந்தக் கலவையில் 5 நிமிடங்கள் ஊறவைத்து, எள்ளை தூவி அலங்கரித்தால் ஹனி சிக்கன் ரெடி.

Share this story