வீட்டிலேயே டேஸ்ட்டியான கிரில்டு சிக்கன் ரெசிப்பி!!

நாம் கிரில்டு சிக்கன் போன்ற உணவுகளைப் பொதுவாக ஹோட்டல்களிலேயே வாங்கிச் சாப்பிடுவதுண்டு. இனி நீங்கள் காசு கொடுத்து வாங்கி கிரில்டு சிக்கன் சாப்பிட வேண்டியதில்லை, இப்போது சுவையான கிரில்டு சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
இஞ்சி விழுது பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
கோழி கால் - 5
தேன் - 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை:
1. கோழி கால் மீது, கத்தியால் ஆழமான கோடுகள் போடவும்.
2. அடுத்து இஞ்சி விழுது பூண்டு விழுது, உப்பு, தேன், மிளகாய் தூள், மிளகு தூள், சர்க்கரை, மல்லி தூள், எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
3. இந்தக் கலவையில் கோழி காலினைப் போட்டு பிரட்டி பிரிட்ஜில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
4. அடுத்து இதனை மைக்ரோ அவனில் வேகவிட்டு எடுத்தால் கிரில்டு சிக்கன் ரெடி.