குளு குளு சர்க்கரைவள்ளிக் கிழங்கு மில்க் ஷேக்!!

கிழங்கு வகைகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கானது சர்க்கரை நோயாளிகள் முதல் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிட ஏற்றதாகும். அந்தவகையில் தற்போது சர்க்கரைவள்ளிக் கிழங்கில் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை :
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1
பாதாம்- 10,
பிஸ்தா- 10,
முந்திரி- 5,
வால்நட் - 5
பால் – 1/4 லிட்டர்
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் - தேவையான அளவு.
ஐஸ் கட்டி- 1
செய்முறை:
1. சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து துருவிக் கொள்ளவும்.
2. அடுத்து பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பவுடராக ஆக்கிக் கொள்ளவும்.
3. அடுத்து சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் பால், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
4. இதனுடன் ஐஸ்கட்டி சேர்த்துப் பரிமாறினால் சர்க்கரைவள்ளிக் கிழங்கு மில்க் ஷேக் ரெடி.