Tamil Wealth

வீட்டிலேயே ரசகுல்லா செய்யலாம் வாங்க!!
 

வீட்டிலேயே ரசகுல்லா செய்யலாம் வாங்க!!

இனிப்பு வகைகளில் அதிக அளவு விலையில் விற்கும் ஒரு இனிப்பு வகைதான் ரசகுல்லா. இந்த ரசகுல்லாவினை நாம் இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
பால் - 1/2 லிட்டர் 
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
ஐஸ் கட்டி – 3
சர்க்கரை – 150 கிராம்
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு
பிஸ்தா – 2

செய்முறை: 
1.    பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஓரளவு சுண்டக் காய்ச்சவும்.
2.     அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பாலை திரியும் வரை கிளறவும்.
3.    அடுத்து பாலில் ஐஸ் கட்டிகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து ஒரு வெள்ளைத் துணியில் போட்டு நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.
4.    அடுத்து திரிந்த பாலை ஒரு பாத்திரத்தில் போட்டு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.
5.    அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து பாகுபோல் காய்ச்சவும்.
6.    அடுத்து உருண்டையினை அதில் போட்டு ஊறவிட்டு அடுத்தநாள் சாப்பிட்டால் ரசகுல்லா ரெடி.
 

Share this story