ரொம்பவும் டேஸ்ட்டியான பூர்ண கொழுக்கட்டை செய்யலாம் வாங்க!!

கொழுக்கட்டை வகைகளில் பால் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, என பலவகைகள் இருந்தாலும் பலராலும் விரும்பப்படுவது பூர்ண கொழுக்கட்டையாகும். இப்போது அந்த பூர்ண கொழுக்கட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப்
எள் - 2 கப்
வேர்க்கடலை - 2 கப்
பொட்டுக்கடலை - 2 கப்
தேங்காய் - 1
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
வெல்லம் – 2 அச்சு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு வாணலியில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் போன்றவற்றை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வெல்லத்தை பொடித்து பாகு காய்ச்சவும்.
3. அடுத்து தேங்காயை லேசாக வதக்கிக் கொள்ளவும், அடுத்து இதனை பாகுடன் கலந்து ஏலக்காய் பொடி கலந்து கொள்ளவும்.
4. அடுத்து பச்சரிசி மாவுடன் உப்பு சேர்த்து சுடு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, அந்த மாவின் இடையே பூர்ணத்தைக் கலந்து கொள்ளவும். இப்போது, பூர்ண கொழுக்கட்டை ரெடி.