Tamil Wealth

நாவில் எச்சில வரவைக்கும் பிச்சி போட்ட சிக்கன் வறுவல்!!

நாவில் எச்சில வரவைக்கும் பிச்சி போட்ட சிக்கன் வறுவல்!!

சிக்கனில் இன்று நாம் ரொம்பவும் வித்தியாசமான மற்றும் புதுவிதமான ரெசிப்பியினைப் பார்க்கப் போகிறோம். அதாவது சிக்கனில் பிச்சி போட்ட வறுவல் என்ற ரெசிப்பியைத் தான் பார்க்கப் போகிறோம்.

தேவையானவை:

சிக்கன் - அரை  கிலோ

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 4

இஞ்சி பூண்டு  விழுது - 2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

சீரகத்தூள் - அரை ஸ்பூன்

மல்லித்தூள் - 2 ஸ்பூன்

மிளகுத் தூள்- 1 ஸ்பூன்

எண்ணெய்  - 4   ஸ்பூன்

கொத்தமல்லி- தேவையான அளவு,

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

1. சிக்கனை உப்பு,  மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

2. அடுத்து எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

3. அடுத்து மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மிளகுத் தூள் வேகவைத்து உதிர்த்த சிக்கன் சேர்த்து தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும்.

4. இறுதியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் பிச்சி போட்ட சிக்கன் வறுவல் ரெடி.

Share this story