Tamil Wealth

அனைவரும் விரும்பி சாப்பிடும் பாலக் கீரை கட்லெட்!!

அனைவரும் விரும்பி சாப்பிடும் பாலக் கீரை கட்லெட்!!

பாலக் கீரையினை பொதுவாக நாம் கடைந்து சாப்பிடவே செய்வோம், ஆனால் பாலகீரையினை கடைந்து சாப்பிட வேண்டுமெனில் பலருக்கும் அது எட்டிக்காய் போல்தான். அதனால் நாம் பாலக்கீரையில் அனைவருக்கும் பிடித்தமாதிரியாக பாலக்கீரை கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பாலக்கீரை  - ஒரு கட்டு
ஸ்வீட் கார்ன் - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
பிரெட் தூள் - 5 டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு 
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

1. ஸ்வீட் கார்னை வேக வைத்துக் கொள்ளவும். அடுத்து உருளைக்கிழங்கையும் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

2. அடுத்து வேகவைத்த சோளம் மற்றும் பாலக்கீரையை மிக்ஸியில் போட்டு லேசாக அரைக்கவும்.

3. அடுத்து உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, அரைத்து சோளம்- பாலக்கீரை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பிசைந்து கொள்ளவும்.

4. அடுத்து பிசைந்த மாவை வடைபோல் தட்டி பிரெட் தூளில் நனைத்து தோசை கல்லில் எண்ணெய்விட்டு பொரித்தால் பாலக்கீரை கட்லெட் ரெடி..

Share this story