புரதச்சத்துகள் நிறைந்த பச்சைப் பயறு புட்டு!!

புரதச்சத்து பற்றாக்குறையானது தலைமுடி உதிர்வு, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்வதாய் உள்ளது, அந்தப் பச்சைப் பயறினைக் கொண்டு புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு – 100 மில்லி
நாட்டு சர்க்கரை - 1 கப்
முந்திரி - 30 கிராம்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
செய்முறை :
1. பச்சைப்பயறை ஊற வைத்து, நீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைக்கவும்.
2. அடுத்து இதனுடன் உப்பு சேர்த்து, இட்லிகளாக செய்து உப்புமா போல் உதிர்த்துக் கொள்ளவும்.
3. அடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரையில் பாகு காய்ச்சி அதனுடன் உதிர்த்த இட்லி, நெய் , தேங்காய் துருவல் , ஏலக்காய் தூள் , முந்திரி சேர்த்து நன்றாக கலக்கவும்.
4. இப்போது பச்சைப்பயறு புட்டு ரெடி..