புரதச் சத்துகள் கொண்ட பச்சைப் பயறு பக்கோடா!!
Jul 29, 2020, 14:54 IST

புரதச் சத்துகளை அதிகம் கொண்ட பச்சைப் பயறு பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பச்சைப்பயறு- 1 கப்
பச்சை மிளகாய்- 3
கொத்தமல்லி இலை- தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட்- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பச்சை பயிறினை ஊற வைக்கவும். அடுத்து பச்சை பயிறு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
2. அடுத்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, அரை டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
3. எண்ணையில் பொரித்தால் பச்சைப்பயறு பக்கோடா ரெடி.