ஈசியாக செய்யகூடிய பால் கொழுக்கட்டை ரெசிப்பி!!
Aug 29, 2020, 20:39 IST

கொழுக்கட்டையில் பிடி கொழுக்கட்டை, பூர்ண கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, கம்பு கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை எனப் பலவகைகள் உண்டு. அவற்றில் ரொம்பவும் செய்ய எளிமையான பால் கொழுக்கட்டை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – கால் கிலோ
பால் – 1 டம்ளர்.
வெல்லம் – கால் கிலோ
ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்
தேக்காய் - 1
செய்முறை:
1. தேங்காயை துருவிக் கொள்ளவும்.
2. அரிசி மாவுடன் சுடு தண்ணீர் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
3. அடுத்து பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி அத்துடன் பால், தேங்காய்த் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து அதில் கொழுக்கட்டையினைப் போட்டு வேகவிட்டு இறக்கினால் பால் கொழுக்கட்டை ரெடி.