Tamil Wealth

ப்ராக்கோலியில் உள்ள சத்துகள் குறித்து பார்ப்போமா?

ப்ராக்கோலியில் உள்ள சத்துகள் குறித்து பார்ப்போமா?

காலிஃப்ளவர் போன்றே அச்சு அசலாக பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு காயினை நீங்கள் பார்த்திருக்கிறார்களா? பலரும் அதனை வித்தியாசமான காயாக நினைத்து வாங்கிப் பயன்படுத்துவதில்லை. ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் ப்ராக்கோலியினை நீங்கள் நிச்சயம் வாங்கிப் பயன்படுத்துவர்.

ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. அதாவது இது கெட்ட கொழுப்பினைக் குறைக்கச் செய்து உடல் எடையினை நிச்சயம் குறைக்கும்.

மேலும் ப்ராக்கோலி கால்சியம் சத்தினை அதிகம் கொண்டதாக உள்ளதால், பல் மற்றும் எலும்பினை வலுவாக்குவதாகவும், பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் இருக்கின்றது.

மேலும் ப்ராக்கோலி புற்றுநோய் பாதுகாப்பு காரணியாக உள்ளது, இதன் தன்மையானது புற்றுநோயினை வராமல் பாதுகாப்பதாகவும் உள்ளது. ப்ராக்கோலி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதாக உள்ளது.

ப்ரோக்கோலி வெண்டைக்காய் மற்றும் வல்லாரைக் கீரையினைப் போல் ஞாபக சக்தியினை அதிகரிப்பதாக உள்ளது. இதனால் 8 மாதக் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் இதனை வாரத்தில் 2 முறையாவது எடுத்துக் கொண்டால் நிச்சயம் ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.

ப்ரோக்கோலியின் தன்மையானது சருமத்தில் ஏற்படும் எந்த மாதிரியான அலர்ஜிகளையும் சரி செய்வதாக உள்ளது.

Share this story