Tamil Wealth

நாவில் எச்சில் ஊறவைக்கும் நல்லி நிஹாரி!!

நாவில் எச்சில் ஊறவைக்கும் நல்லி நிஹாரி!!

நல்லி எலும்பு அதிக அளவில் சத்துகளைக் கொண்டதாக உள்ளது, இதனை உடல்நிலை சரியில்லாதவர்கள் எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகின்றது. இப்போது நாம் நல்லி நிஹாரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நல்லி எலும்பு - 1/2 கிலோ

வெங்காயம் - 1 கப்

கோதுமை மாவு - 2 ஸ்பூன்

இஞ்சி- 1

நெய் - 2 ஸ்பூன்

சீரகம் - 2 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

பிரியாணி இலை- 2

மிளகு - 1 ஸ்பூன்

இலவங்கப்பட்டை- 2

ஜாதிக்காய்- 2

அன்னாசி பூ- 2

கிராம்பு- 2

ஏலக்காய் - 4

பொட்டுக்கடலை - 1  ஸ்பூன்

கச கசா - 1 ஸ்பூன்

மிளகாய் - 5

இஞ்சி பேஸ்ட்- 1 ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

செய்முறை

1. குக்கரில் நல்லி எலும்புகளை தண்ணீர், உப்பு சேர்த்து விசில்விட்டு வேகவிடவும்

2. அடுத்து வாணலியில் சீரகம், சோம்பு, பிரியாணி இலை, மிளகு, பட்டை, ஜாதிக்காய், அன்னாசி பூ, கிராம்பு, ஜாவிதிரி, ஏலக்காய், பொட்டுக்கடலை, கச கசா, மிளகாய் வத்தல் மற்றும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்,

3. அதன்பின்னர் வதக்கிய இந்தக் கலவையினை அரைக்கவும்

4. அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி நல்லியை சேர்த்து அரைத்த மசாலா தூள்,  வெங்காயம், தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்

5.இறுதியில் கோதுமைமாவை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

6. 5 நிமிடங்கள் கழித்து இறக்கினால் நல்லி நிஹாரி ரெடி.

Share this story