சுவையான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்!!

நாட்டுக் கோழியானது சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு சிறப்பான தீர்வினைக் கொடுக்கும். அந்த நாட்டுக் கோழியில் இன்று சுவையான கொத்துக்கறி மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
நாட்டுக்கோழி - 1 கிலோ
பெரியவெங்காயம் - 3
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகுதூள் - 4 டீ ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. நாட்டுக்கோழியை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவிடவும்.
2. அடுத்து சிக்கனை கொத்துக் கறியாக வெட்டிக் கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
4. அடுத்து மிளகாயை கிள்ளி போட்டு, அதனுடன் சிக்கனை சேர்க்கவும்.
5. இத்துடன் சீரகத்தூள், பெப்பர் தூள், உப்பு சேர்த்து வேகவிட்டு எடுத்தால் நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் ரெடி.