மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
Jul 22, 2020, 11:04 IST

குழந்தைகள் வீட்டில் இருக்கும் நாட்களில் நாம் வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுத்து அசத்தலாம், அந்தவகையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஐஸ்கிரீமை மாம்பழத்தினைக் கொண்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மாம்பழம் - 1
பால் - 1 கப்
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கப்
ஜெல்லி - 2 ஸ்பூன்
செய்முறை :
1. பாலை சுண்டக் காய்ச்சி ஆற விடவும்.
2.அடுத்து மாம்பழத்தை தோல் நீக்கி தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3. பாலுடன் ஜெல்லி சேர்த்து அடித்து அதனுடன் மாம்பழச் சாறுடன் சேர்த்துக் கொள்ளவும்.
4. இந்த கலவையை 3 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து, வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்க்கவும், இப்போது மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.