செரிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் லெமன் சோடா!!

லெமன் சோடா 90 களின் காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது, காலப்போக்கில் பலவகையான கூல் டிரிங்க்ஸ் வந்தபடியால் லெமன் சோடா மறைந்து போனது. அந்த லெமன் சோடாவை இப்போது செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை காய்- 1
எலுமிச்சை பழம் - 2
சர்க்கரை - 1 கப்
எலுமிச்சை தோல் - 1 டீஸ்பூன்
சோடா வாட்டர் – தேவையான அளவு
செய்முறை:
1. எலுமிச்சை தோலை துருவிக் கொள்ளவும்.
2. அடுத்து துருவிய எலுமிச்சைத் தோலுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு சர்க்கரை சேர்க்கவும்.
3. அடுத்து எலுமிச்சை பழம் மற்றும் காய் ஆகியவற்றில் சாறு எடுத்துக் கொள்ளவும்.
4. இந்தக் கலவையை ஃப்ரிட்ஜில் சேகரித்துக் கொள்ளவும்.
5. அடுத்து இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஐஸ்கட்டிகளைப் போட்டு இரண்டு மடங்கு சோடா ஊற்றினால் லெமன் சோடா ரெடி.