Tamil Wealth

5 நிமிஷத்துல செய்யக்கூடிய கிவி சாண்ட்விச்!!

5 நிமிஷத்துல செய்யக்கூடிய கிவி சாண்ட்விச்!!

அலுவலகம் செல்லும்போதோ இல்லை வெளியே கிளம்பும்போதோ நமக்கு சமைக்க நேரம் இருக்காது, அந்த மாதிரியான நேரங்களில் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு உணவினை எப்படி செய்வது என்று பார்க்கலாம், அந்தவகையில் கிவி பழத்தில் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கிவி - 2

பிரெட் - 4

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

தேன்- 1 டீஸ்பூன்.

செய்முறை :

1. கிவி பழத்தை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

2. அடுத்து பிரெட்டில் வெண்ணெய் தடவி தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும்.

3. அடுத்து கிவித் பழத்தினை தேன் தடவி அதனை பிரெட்டில் வைத்து மற்றொரு பிரெட்டை வைத்து மூட வேண்டும்.

4. அவ்வளவுதான் கிவி பிரெட் சாண்ட்விச் ரெடி.

Share this story