Tamil Wealth

குழந்தைகளுக்குப் பிடித்தமான சிக்கன் பாஸ்தா!!

குழந்தைகளுக்குப் பிடித்தமான சிக்கன் பாஸ்தா!!

குழந்தைகளுக்குப் பிடித்தமான சிக்கன் பாஸ்தா செய்து கொடுத்துப் பாருங்கள், நிச்சயம் அவர்கள் இதனை கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

தேவையானவை:
சிக்கன் - 1 கப்
பாஸ்தா – கால் கிலோ
பூண்டு - 7 பற்கள்
சீஸ் - 1/4 கப்
க்ரீம் - 1/2 கப்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 4 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1.    பாஸ்தாவை உப்பு மற்றும் லேசாக எண்ணெய்விட்டு நன்கு வேகவிடவும்.
2.    வாணலியில் வெண்ணெய் போட்டு, நசுக்கிய பூண்டு, சிக்கன் சேர்த்து கிளறி, 15 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
3.    அடுத்து கிண்ணத்தில் சோள மாவு, மற்றும் பால் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும்.
4.    அடுத்து வாணலியில் க்ரீம், சோள மாவு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
5.    அடுத்து சீஸ் போட்டு, கொத்தமல்லி மற்றும் வேக வைத்த பாஸ்தா சேர்த்து மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்தால், சுவையான சிக்கன் பாஸ்தா ரெடி.
 

Share this story