Tamil Wealth

சத்துநிறைந்த கேழ்வரகு இனிப்புக் கொழுக்கட்டை!!

சத்துநிறைந்த கேழ்வரகு இனிப்புக் கொழுக்கட்டை!!

நாம் பொதுவாக அரிசி மாவிலேயே கொழுக்கட்டை செய்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இப்போது சத்துகள் நிறைந்த கேழ்வரகில் இனிப்புக் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 கேழ்வரகு மாவு - ஒரு கப்

பாசிப் பருப்பு - ஒரு கைப்பிடி

தேங்காய்த் துருவல் - கால் கப்

நாட்டுச் சர்க்கரை - கால் கப்

ஏலக்காய் - 2

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. பாசிப்பருப்பை வாணலியில் போட்டு வறுத்து தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

2. அடுத்து வாணலியில் கேழ்வரகு மாவைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

3, அடுத்து பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி பாகி காய்ச்சவும்.

4, ஒரு அடிகனமான பாத்திரத்தில் ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லப் பாகு, ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொழுக்கட்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.

5, இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து, மூடி போட்டு 20 நிமிடங்கள் வேகவிடவும்.

6. சுவையான கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை ரெடி.

Share this story