கதம்ப புட்டு செய்யலாம் வாங்க!!
Aug 18, 2020, 10:00 IST

புட்டில் நாம் பொதுவாக அரிசிமாவில் செய்த வெள்ளைநிற புட்டினையே செய்வோம், இன்று நாம் சுவையான கதம்ப புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
அரிசி மாவு - கால் கிலோ
முளைகட்டிய பச்சை பயறு – 50 கிராம்
கேரட் - 3
பீன்ஸ் - 100 கிராம்
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
1. கேரட் மற்றும் பீன்ஸை நறுக்கி கொள்ளவும்.
2. அரிசி மாவுடன் பீன்ஸ், கேரட், உப்பு, தண்ணீர் கலந்து இட்லி தட்டில் போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.
3. கலர்ஃபுல்லான கதம்ப புட்டு தயார்.