Tamil Wealth

டேஸ்ட்டியான இறால் குழம்பு செய்வது எப்படி?
 

டேஸ்ட்டியான இறால் குழம்பு செய்வது எப்படி?

இறால் தலை முடி கொட்டுதல், உடைதல், அடர்த்தி குறைதல், நுனி முடித்தல் என அனைத்துவிதமான தலைமுடி சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. அந்த இறாலில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
இறால் – 250 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 1
தக்காளி – 3
மஞ்சள்- 1 ஸ்பூன்
பட்டை - 2
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1  ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் – கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை :

1. இறாலை உப்பு மற்றும் மஞ்சள் போட்டு கழுவிக் கொள்ளவும்.
2. அடுத்து வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். 
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, பூண்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
4. அடுத்து இறால், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. இறுதியாக தேங்காய்ப் பால் சேர்த்து வேகவிட்டு இறக்கினால் இறால் குழம்பு ரெடி.


 

Share this story