Tamil Wealth

ஒல்லியாக குடிங்க நெல்லிக்காய் டீ!!

ஒல்லியாக குடிங்க நெல்லிக்காய் டீ!!

உடல் பருமன் பிரச்சினையானது பலரும் சந்திக்கும் பிரச்சினையாகும், இந்தப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக நாம் நெல்லிக்காய் டீயை எவ்வாறு தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் பொடி - 1 டீஸ்பூன்

இஞ்சி துருவல்  - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்

தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை :

1, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.

2. அடுத்து நெல்லிக்காய் பொடி, இஞ்சி துருவல், மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

3. அடுத்து தண்ணீர் 1 கப்பாக சுண்டிய பின்னர் இறக்கி வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் நெல்லிக்காய் டீ ரெடி.

Share this story