Tamil Wealth

டேஸ்ட்டியான கருவாட்டு பிரியாணி!!

டேஸ்ட்டியான கருவாட்டு பிரியாணி!!

சிக்கன், மட்டனில் மட்டுமே நாம் பொதுவாக பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று வித்தியாசமாக கருவாட்டில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1/2  கிலோ

வஞ்சிரம் கருவாடு - 1/2 கிலோ

வெங்காயம் - 1/2 கிலோ

தக்காளி - 1/2 கிலோ

பச்சை மிளகாய் - 6

மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்

தயிர் - 1 கப்

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

புதினா - தேவையான அளவு

பட்டை- 1

ஏலம்- 1,

கிராம்பு - 1

பிரியாணி இலை - 2

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

எலுமிச்சை - 1/2 பழம்

செய்முறை :

1. அரிசியை கழுவி ஊறவைக்கவும். அடுத்து கருவாட்டை கழுவி எண்ணெயில் பொரித்து வைக்கவும்.

2. அடுத்து தக்காளி, வெங்காயத்தை வெட்டி வதக்கவும்.

3. அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

4. அடுத்து இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, தக்காளி, தயிர் சேர்த்து வதக்கவும்.

5. அடுத்து உப்பு, கருவாடு, அரிசி போட்டு அரிசியைவிட இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு ஒரு விசில் விட்டு இறக்கவும்.

6. அடுத்து நெய், கொத்தமல்லி, எலுமிச்சை பிழிந்து தம் போட்டு இறக்கினால்  கருவாட்டு பிரியாணி ரெடி.

Share this story