Tamil Wealth

சுவையான கோதுமை அல்வா செய்யலாம் வாங்க!
 

சுவையான கோதுமை அல்வா செய்யலாம் வாங்க!

கோதுமை மாவில் நாம் சப்பாத்தி, பூரி போன்ற ரெசிப்பிகளையே செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று கோதுமையில் ரொம்பவும் சுவையான கோதுமை அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு –  100 கிராம்
சர்க்கரை –  200 கிராம் 
நெய் –  150 கிராம்
முந்திரிப் பருப்பு –  15

செய்முறை
1. வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் கோதுமை மாவினைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
3. அடுத்து மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் கோதுமை மாவினை சேர்த்து வேகவிடவும். 
4. அதன்பின்னர் இதனுடன் சர்க்கரை மற்றும் நெய் ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே 30 நிமிடங்கள் வரை இருக்கவும்.
5. நெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கினால் கோதுமை அல்வா ரெடி.
 

Share this story