Tamil Wealth

சுவையான தவா மஸ்ரூம் ரெசிப்பி!!

சுவையான தவா மஸ்ரூம் ரெசிப்பி!!

நாம் காளானில் இதுவரை செய்த ரெசிப்பிகளில் இன்று வித்தியாசமான ரெசிப்பியினை செய்து கொடுத்து வீட்டில் உள்ளோரை அசத்தலாம் வாங்க. அந்த வகையில் சுவையான தவாவில் மஸ்ரூம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

காளான் - 1 கப்

குடைமிளகாய் - 1/4 கப்

பெரிய வெங்காயம் - 1/4

தக்காளி - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

சீரகம்- 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. தவாவில் எண்ணெய் ஊற்றி, சீரகத்தைப் போட்டு தாளிக்கவும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

2. அடுத்து தக்காளியை அரைத்து வதக்கவும். அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, உப்பு  சேர்த்து வதக்கவும்.

3. அடுத்து காளானை சேர்த்து வேகவிட்டு குடைமிளகாய், சிறிது எண்ணெய், மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால், தவா மஸ்ரூம் ரெடி.

Share this story