10 நிமிஷத்தில் செய்யக்கூடிய சேமியா பக்கோடா!!

வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கும் தருணங்களில் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம். அந்தவகையில் மிகவும் எளிதில் செய்யக்கூடிய சேமியா பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
சேமியா - 100 கிராம்
கடலை மாவு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 2
புதினா - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய்த்தூள் -தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. சேமியாவை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
2. அதன்பின்னர் சேமியாவை வடிகட்டி அத்துடன் கடலைமாவு, அரிசி மாவு, வெங்காயம், மிளகாய் தூள், புதினா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
3. அதன்பின்னர் இந்த பக்கோடாவை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
4. அனைவருக்கும் பிடித்தமான சேமியா பக்கோடா ரெடி.