சத்துக்கள் நிறைந்த முடக்கத்தான் கீரை இட்லி!!
Sep 22, 2020, 14:43 IST

முடக்கத்தான் கீரையானது மூட்டு வலிப் பிரச்சினைக்குப் பெரும் தீர்வாக இருக்கின்றது. அந்தவகையில் இப்போது முடக்கத்தான் கீரை இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 4 கப்,
உளுந்து – 3/4 கப்,
வெந்தயம் – 2 ஸ்பூன்,
முடக்கத்தான் கீரை - 2 கப்,
வாழை இலை - 1,
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து இதனை அரைத்து அதனுடன் முடக்கத்தான் கீரையையும் சேர்த்து அரைக்கவும்.
3. அடுத்து உப்பு சேர்த்து இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து அதன்மேல் நல்லெண்ணெய் தடவி மாவை ஊற்றி வேகவிட்டு இறக்கவும்.
4. இப்போது முடக்கத்தான் இலை இட்லி ரெடி.