சூடான சுவையான லெமன் சிக்கன் ரெசிப்பி!!

சிக்கன் என்றதும் பொதுவாக நாம் பிரியாணி, கிரேவி, வறுவல் என்றே செய்வோம். ஆனால் இன்று சுவையான லெமன் சிக்கன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக் பீஸ்- 4
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
சிக்கன் ஸ்டாக் - 2 கப்
கார்ன்ஃப்ளவர் - 6 ஸ்பூன்
பச்சை மிளகாய் 4
பச்சை குடை மிளகாய் - 1
வெள்ளை மிளகுத்தூள் – 1/2 டீ ஸ்பூன்
ஜாதிக்காய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. சிக்கனுடன், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஊறவிடவும்.
2. அடுத்து 2 ஸ்பூன் கார்ன்ப்ளவரை நீரில் கரைத்துக் கொள்ளவும், குடை மிளகாயினை நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சைத் தோலினை துருவிக் கொள்ளவும்
3. சிக்கனை கார்ன்ஃப்ளவரில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
4. அடுத்து வாணலியில் ண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், குடை மிளகாய், மிளகுத் தூள், உப்பு, ஜாதிக்காய், எலுமிச்சைத் தோல்,சிக்கன் சேர்த்து வேகவிடவும்.
5. இதில் கார்ன்ஃப்ளவரை ஊற்றிக் கலந்து வேகவிட்டு இறக்கவும்.
6. இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றவும், இப்போது லெமன் சிக்கன் ரெடி.