Tamil Wealth

சுவையான ஹனி இறால் செய்யலாம் வாங்க!!  

சுவையான ஹனி இறால் செய்யலாம் வாங்க!!

இறாலில் இன்று நாம் ரொம்பவும் வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிப்பி செய்வது என்று பார்க்கலாம். அதாவது இறாலில் சுவையான ஹனி இறால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இறால் - 100 கிராம்

மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

சர்க்கரை - கால் டீஸ்பூன்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

பூண்டு - 1

மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்

தேன் - 1 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1/2  டீஸ்பூன்

கார்ன்ஃப்ளேக்ஸ் - 50 கிராம்

கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன்

மைதா - 1 டீஸ்பூன்

வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  1. இறாலைக் கீறிக் கொள்ளவும், அடுத்து பூண்டை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
  2. கார்ன் ஃப்ளேக்ஸினை நொறுக்கி அதனுடன் மைதா, சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  3. அடுத்து இறாலை பிசைந்த கலவையில் புரட்டி எடுத்துக் கொள்ளவும்.
  4. அடுத்து பிசைந்து வைத்த கலவையை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  5. அடுத்து கடாயில் எண்ணெய், வெண்ணெய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சில்லி பேஸ்ட், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ் ஊற்றி கொதிக்க விடவும்.
  6. இறுதியாக அதனுடன் பொரித்த இறால் மற்றும் தேன் ஊற்றி இறக்கவும்.

Share this story