Tamil Wealth

சுவையான முட்டை பொரியல் ரெசிப்பி!!
 

சுவையான முட்டை பொரியல் ரெசிப்பி!!

ரசம் சாதத்திற்கு வைத்து சாப்பிடும் வகையில் முட்டையில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையானவை: 
முட்டை - 3
வெங்காயம் - 2 
தக்காளி - 2 
வர மிளகாய் - 2 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 
1.    முதலில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு போட்டு கலக்கவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி மற்றும் மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து வேகவிடவும்.
3.    அடுத்து முட்டையை சேர்த்து வேக விட்டு இறக்கினால் முட்டை பொரியல் ரெடி. 
 

Share this story