Tamil Wealth

சுவையான சீன மாண்டரின் சிக்கன்!!

சுவையான சீன மாண்டரின் சிக்கன்!!

சீன உணவுகளில் பலருக்கும் பிடித்த உணவு என்னவெனில், மாண்டரின் சிக்கன்தான் ஆகும். இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் சீன மாண்டரின் சிக்கன் செய்து கொடுத்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் - 1
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 4
சிவப்பு மிளகாய் - 4
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
ரைஸ் ஒயின் – 1 ஸ்பூன்
ஓய்ஸ்டர் சாஸ் - 1 டீஸ்பூன்
சிக்கன் சீஸனிங் - 1 டீஸ்பூன்
சோள மாவு- 2 டீஸ்பூன்
எள் - தேவையான அளவு
வெங்காயத்தாள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு

 

செய்முறை :

1 சிக்கனுடன் பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், சோள மாவு, சோயா சாஸ், உப்பு மற்றும் ரைஸ் ஒயின் ஆகியவற்றை சேர்த்து கலந்து ஊறவைக்கவும்.

2. அடுத்து ஊறிய சிக்கனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அடுத்து எள்ளை வறுத்துக் கொள்ளவும்.

3. அடுத்து எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம், ஓய்ஸ்டர் சாஸ், சிவப்பு மிளகாய், சோயா சாஸ் வாணலியில் போட்டு வதக்கவும்.

4. அடுத்து பொரித்த சிக்கன், உப்பு, மிளகு தூள், எள், வெங்காயத் தாள் சேர்த்து இறக்கினால் சீன மாண்டரின் சிக்கன் ரெடி.

Share this story