Tamil Wealth

மொறு மொறு கருணைக் கிழங்கு கபாப்!!

மொறு மொறு கருணைக் கிழங்கு கபாப்!!

கருணைக் கிழங்கில் குழம்பு, பொரியல், வறுவல், சிப்ஸ் என செய்வது எப்படி என்று பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இப்போது கருணைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கருணைக்கிழங்கு – 1/4 கிலோ
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்,
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பிரட் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்,
புளி- தேவையான அளவு
புதினா - தேவையான அளவு
மைதா- 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. கருணைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி புளி சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு பேஸ்ட்டை சேர்த்து மிளகாய்த் தூள், மிளகுத் தூள், தனியா தூள், கரம் மசாலா, புதினா, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
3. கருணைக்கிழங்கை போட்டு பிசைந்து கொள்ளவும்.
4. அடுத்து உருண்டைகளாக பிடித்து மைதா மற்றும் பிரெட் தூளில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
5. இப்போது சுவையான கருணைக் கிழங்கு கபாப் ரெடி.

Share this story