சுத்தமான சமையல் அறையே ஆரோக்கிய உணவை கொடுக்கும்!
Sep 8, 2017, 17:35 IST

நம் சமையல் அறை இருக்கும் சுத்தத்தை பொறுத்தே நாம் உட்கொள்ளும் உணவுகளில் இருந்து நமக்கு கிடைக்கும் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளலாம்.
சமையல் அறையின் சுத்தம் :
- சமையல் செய்வதற்கு முன் கைகளை நன்கு சுத்தம் செய்து விட்டு பின்னர் ஆரம்பிப்பதே நல்லது.
- காய்கறிகளை நறுக்கிய பின் மீதம் இருக்கும் கழிவுகளை உடனே அப்புற படுத்தி குப்பை தொட்டியில் போட வேண்டும். சமையல் முடிந்த பின் அந்த இடத்தை சுத்தம் செய்வதினால் நோய் தொற்றுகள் எதுவும் அண்டாது.
- மின்சார சம்பந்தமான பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்த பின்னரே உபயோகியுங்கள், உபயோகித்த பின்னரும் சுத்தம் செய்ய வேண்டும்.
- சாப்பிட தட்டை அப்படியே போட்டு விடாமல் உடனே கழுவ வேண்டும் இல்லையென்றால் கொசுக்கள் அந்த தட்டில் இருக்கும் நீரில் அசுத்தத்தை ஏற்படுத்தி விடும். இதனால் நோய்கள் ஏற்படும்.
- சுத்தம் செய்யும் பொழுது கைகளில் பாதுகாப்பு ஏதேனும் அணிந்து கொள்வது நல்லது. அது நோய் தொற்றுகளிடம் இருந்து பாதுக்காக்கும்.