Tamil Wealth

அனைவருக்கும் பிடித்தமான சிக்கன் லெக் பீஸ் ப்ரை!!

அனைவருக்கும் பிடித்தமான சிக்கன் லெக் பீஸ் ப்ரை!!

பொதுவாக சிக்கன் லெக் பீஸ் ஃப்ரை செய்வதை கடினமாக விஷயமாக எண்ணி பலரும் இதனை கடையில் வாங்கிச் சாப்பிடுவதுண்டு. ஆனால் இனி நீங்கள் கடையில் வாங்கத் தேவையில்லை வீட்டிலேயே செய்யலாம்.

தேவையானவை:

சிக்கன் லெக் - 5

இஞ்சி பூண்டு விழுது - 3 டீ ஸ்பூன்

தயிர் - 1/4 கப்

மஞ்சள் பொடி - 1 டீ ஸ்பூன்

மிளகாய்பொடி - 3 டீ ஸ்பூன்

கரம்மசாலா - 3 டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

கேசரி பவுடர்- சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

1. லெக் பீஸை சுத்தம் செய்து கொள்ளவும்.

2. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்தூள், கரம் மசாலா, தயிர், கேசரி பவுடர், உப்பு போன்றவைகளைக் கலந்து கொள்ளவும்.

3. லெக் பீஸை கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

4. அடுத்து எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும்.

5. இப்போது டேஸ்ட்டியான் சிக்கன் லெக் ப்ரை ரெடி.

Share this story