நாவில் எச்சில் வரவைக்கும் சிக்கன் நெய் சாதம்!!

நாம் பொதுவாக சிக்கனில் பிரியாணி, கிரேவி, குழம்பு, சிக்கன் 65 என்பது போன்ற உணவு வகைகளையே செய்து இருப்போம், இன்று சிக்கனில் டேஸ்ட்டியான நெய் சாதத்தினை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 1/2 கிலோ
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைபழம் – 1/2 மூடி
பச்சை மிளகாய் - 10
வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி - 3
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 10 பல்
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பட்டை - 2
புதினா – 1/4 கட்டு
கொத்தமல்லி இலை - கால் கட்டு
முந்திரிப்பருப்பு - 10
தேங்காய் - கால் மூடி
நெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
1. அரிசியை நன்கு கழுவி 1 1/2 மடங்கு நீர் சேர்த்து உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும். அடுத்து இதனை ஆறவைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தேங்காய் விழுது ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
4. அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி முந்திரி சேர்த்து வறுக்கவும்.
5. வாணலியில் இன்னும் சிறிது நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
6. அடுத்து வதக்கிய வெங்காயத்துடன் அரைத்த இஞ்சி, பூண்டை சேர்த்து மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
7. அடுத்து தக்காளி, கரம் மசாலா சிக்கன் துண்டுகளைப் போட்டு தேங்காய் விழுது மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.
8. சிக்கன் வெந்ததும், எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விடவும். பிறகு கொத்தமல்லி, புதினாவைத் தூவவும்.
9. அடுத்து ஆற வைக்கும் சாதத்தில் வதக்கிய கறி மசாலாவைக் கொட்டி நன்கு கிளறி வறுத்த முந்திரி பருப்பு, எடுத்து வைத்த வெங்காயத்தையும், நெய்யையும் சேர்த்து பரிமாறினால் சூப்பரான சிக்கன் நெய் சாதம் ரெடி.