சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பாகற்காய் சாலட்!!
Aug 8, 2020, 11:00 IST

பாகற்காய் கசக்கும் என்பதால் பலரும் அதனை சாப்பிடுவதில்லை, ஆனால் இந்த பாகற்காயானது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அந்தவகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பாகற்காய் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பாகற்காய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
1. பாகற்காயை மெலிதாக வெட்டிக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பாகற்காய், எலுமிச்சைசாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்தால் பாகற்காய் சாலட் ரெடி.