ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் பீட்ரூட் சட்னி!!

பீட்ரூட் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. அந்தவகையில் தற்போது ரொம்பவும் சிம்பிளாக பீட்ரூட்டில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
வரமிளகாய் - 4
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கீற்று
தேங்காய் - 1 துண்டு
சின்ன வெங்காயம் - 4
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
கடுகு- தேவையான அளவு
உளுந்து- தேவையான அளவு
புளி - தேவையான அளவு
செய்முறை
1. பீட்ரூட் மற்றும் தேங்காயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் விட்டு வரமிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பீட்ரூட்டை வதக்கவும்.
3. வதக்கிய பொருட்களை புளி மற்றும் உப்புச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்து பீட்ரூட் சட்னியில் சேர்த்து கலக்கவும்.
5. இப்போது சுவையான பீட்ரூட் சட்னி ரெடி.