Tamil Wealth

சுவையான பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட்!!

சுவையான பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட்!!

உடல் எடையினைக் குறைக்க நினைப்போருக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த உணவாகும், தற்போது நாம் சத்துகள் நிறைந்த கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பார்லி - 1 கப்

ஒட்ஸ் - 1 கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

கேரட் துருவல் - கால் கப்

பீன்ஸ் - 10

கொத்த மல்லி- சிறிதளவு

கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

கடுகு - சிறிதளவு

செய்முறை :

1. வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பீன்ஸ், கொத்த மல்லியினை நறுக்கி கொள்ளவும்.

2. அடுத்து பார்லியை வேக வைத்து கொள்ளவும். அதேபோல் ஒட்ஸினை உடைத்துக் கொள்ளவும்.

3. அடுத்து பார்லியினை தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

4. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,  வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.

5. அடுத்து கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து வேக விடவும்.

6. அடுத்து கரம் மசாலா தூள்,  கொத்தமல்லி சேர்த்து வேகவிடவும்.

7. அடுப்பில் இருந்து கலவையை இறக்கி பார்லி, ஒட்ஸ், உப்பு சேர்க்கவும்.

8. இதனை தோசை கல்லில் போட்டு ண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுத்தால் பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட் ரெடி.

Share this story