ஆரோக்கியமான வாழைப்பழ டீ!!
Jul 25, 2020, 19:46 IST

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. இந்த வாழைப்பழத்தில் டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வாழைப்பழம் - 1
லவங்கப்பட்டை - 1 துண்டு
டீ தூள் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு வேகவிடவும்.
2. அடுத்து சிறிது லவங்கப்பட்டை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
3. அடுத்து இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்தால் வாழைப்பழ டீ ரெடி.
இந்த வாழைப்பழ டீயினை தினமும் ஒருநேரம் குடித்து வருதல் நல்லது.