ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கான வாழைத்தண்டு சூப்!!

ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்கள் பலரும் பலவகையான டிப்ஸ்களை பின்பற்றுவதை நாம் பார்த்திருப்போம். அந்தவகையில் தற்போது ஒபேசிட்டி பிரச்சினைக்கு டாடா சொல்லும் வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருள்:
வாழைத்தண்டு - 1 கப்
தக்காளி - 1
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 5
சின்ன வெங்காயம் - 5
இஞ்சி - 1 துண்டு
பூண்டு பல் - 2
கொத்தமல்லி- தேவையான அளவு,
கறிவேப்பலை - தேவையான அளவு
தனியா - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
1. வாழைத்தண்டை துண்டுகளாக்கி கொதிக்க விடவும்.
2. அடுத்து தனியா, சீரகம் மற்றும் மிளகினைப் பொடித்துக் கொள்ளவும்.
3. அடுத்து வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த பேஸ்ட், பொடித்த தூள், மஞ்சள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
5. இறுதியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும், இப்போது வாழைத்தண்டு சூப் ரெடி.